பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது வசமாக சிக்க போகிறார் என்று தான் ரசிகர்கள் தற்போது வரை காத்திருந்தார்கள். அந்த தருணம் தற்போது வந்துவிட்டது.
கோபியின் உண்மை முகத்தை பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் ராதிகாவிடம் எச்சரித்துவிட்டு சென்ற நிலையில் தற்போது இந்த ட்விஸ்ட் வந்திருக்கிறது.
கோபியின் குடும்பத்தை பார்க்க வேண்டும் என ராதிகா கேட்க அதை கோபியால் செய்ய முடியாமல் போகிறது.
அதன் பின் குடித்துவிட்டு வந்து கோபி ராதிகாவீட்டில் ரகளை செய்கிறார். தன் குடும்பத்தை பார்க்க வேண்டும் என சொன்ன ராதிகாவிடம் போட்டோவை எடுத்து காட்டுகிறார் அவர்.
பாக்யா தான் கோபியின் மனைவி என அறிந்து ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார். அந்த ப்ரோமோ இதோ..




















