நடிகர் மன்சூர் அலி கான் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அதிகம் பிரபலம் ஆனவர். ஆனால் சமீப காலமாக அவர்திரைப்படங்களில் காமெடியனாக தான் நடித்து வருகிறார். அடிக்கடி தேர்தலில் போட்டியிடுகிறேன் என கூறி அதற்காக வித்யாசமாக பிரச்சாரம் செய்து இணையத்தில் அடிக்கடி வைரலாகிறார் அவர்.
தற்போது மன்சூர் அலி கான் போலீசில் அளித்திருக்கும் புகாரில் தன்னிடம் 50 லட்சம் ஏமாற்றியவரிடம் இருந்து மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
நிலம் வாங்குவதற்காக தந்த 50 லட்சம் ரூபாய் வரிசைக்கனி என்பரிடம் இருந்து திரும்ப பெற்று தரும்படி சென்னைஆணையர் அலுவலகத்தில் மன்சூர் அலி கான் புகார் அளித்து இருக்கிறார்.




















