இலங்கைக்குச் சொந்தமான கப்பல்கள் இரண்டை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு வாடகைக்குக் கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess பெயர் கொண்ட இரண்டு வர்த்தகக் கப்பல்களும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காலத்தில் சர்வதேச வாடகை கப்பல் போக்குவரத்துக்கான டெண்டர் அண்மையில் கோரப்பட்டிருந்தது.
விலை மனு சமர்ப்பிப்பு
அதனடிப்படையில் சிங்கப்பூரைச் சேர்ந்த M/s Wallem Shipping Pte Ltd. நிறுவனம் பொருத்தமான விலைமனுவொன்றை சமர்ப்பித்திருந்தது.
எனவே குறித்த காலப்பகுதியில் கப்பல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess கப்பல்கள் இரண்டையும் மேற்குறித்த சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் கையளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.