வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர் அனுப்பும் அந்நிய செலாவணி வீணாகச் செலவழிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் மனூஷ நாணயக்கார,
வேண்டுகோள்
வெளிநாடுகளில் தொழில்புரிவோர் அனுப்பும் அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டுமாயின், அவர்கள் அனுப்பும் பணம் வீணாகச் செலவழிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
அந்த உறுதிமொழியை நான் அவர்களுக்கு வழங்குகின்றேன். தற்போதைக்கு இந்நாட்டில் நிலவும் நெருக்கடி காரணமாக அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு வழங்குவதற்குத் தேவையான எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் , பசளை போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள ஒத்தாசை செய்யுமாறு வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
முன்னைய அரசாங்கத்தின் தவறுகள் காரணமாகத் தாம் அனுப்பும் பணம் ஹெலிகொப்டர்களுக்கு எரிபொருள் நிரப்ப வீணாக்கப்படுகின்றது என்ற அதிருப்தி வெளிநாடுகளில் தொழில் புரிவோரிடம் உள்ளது. இனி அந்த தவறுகள் நடைபெறாது.
அந்நிய செலாவணி வீணாக்கப்படமாட்டாது ஜனாதிபதியும் தவறுகளைத் திருத்திக் கொண்டு நாட்டை முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றார். எனவே இந்தத் தருணத்தில் நாட்டை முன்னேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.