தைவான் சுகந்திரத்தை அறிவித்தால், சீனா போர் நடவடிக்கையை தொடங்க தயங்காது என சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
சீனாவின் எல்லையில் அமைந்துள்ள தைவான் மீது சீனா படையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது.
இந்நிலையில், தைவான் மற்றும் சீனா இடையே உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இன்று சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர்ஆகியோர் சிங்கபூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சீன பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இதன்போது தைவான் குறித்து பேசிய சீன பாதுகாப்பு அமைச்சர் , தைவான் தன்னை சுகந்திர நாடாக அறிவித்தால், சீனா தனது போர் நடவடிக்கைகளை தொடங்க சிறிதும் தயங்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒருவேளை யாரேனும் தைவானை சீனாவிடம் இருந்து பிரிக்க நினைத்தால், அது என்ன விலையாக இருந்தாலும், சீன இராணுவம் எத்தகைய தயக்கமும் இன்றி தனது போர் நடவடிக்கையை தொடங்கும் எனவும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு சீனா விடுத்துள்ள எச்சரிக்கை
தைவானை சீனா நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் அதன் மீது போர் தொடுக்கவும் சீனா தயங்காது.
மேலும், சில நாடுகள் சீனாவைக் கட்டுப்படுத்த தைவானை பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது. தைவானின் சுதந்திரம் என்னும் சதியை முறியடித்து நாட்டின் ஒருங்கிணைப்பை சீனா உறுதிசெய்யும் எனவும் சீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.