மும்பை, இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் 3 ஒருநாள் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.
2 அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22ம் தேதி தொடங்க இருக்கிறது. ஏற்கெனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி இடமில்லை
இந்த அணியில், ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், டி-20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். ஆனால், டி-20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, சாஹல் பெயர் இடம் பெறவில்லை. இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.