முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை விமர்சித்தமையால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரியை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டம் குறித்து ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தேசிய தொலைக்காட்சியின் தொகுப்பாளர் பரமி நிலேப்னா ரணசிங்க பதவி நீக்கப்பட்டிருந்தார்.
இந்ந்லையில் அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு விமுக்தி துஷ்யந்த் என்பவர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டிஜிட்டல் ஜேர்னலிஸ்ட் கலெக்டிவ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, “மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது, பரமி ரணசிங்க மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்” என்ற தலைப்பிலான அறிவித்தலை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.