சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு சத்தான மிளகு குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம், கடலைப் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவைக்கு
புளி – சிறிய அளவு உப்பு – தேவைக்கு
செய்முறை விளக்கம்
முதலில் தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
அடுத்து தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் மிக் சியில் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊ ற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும். அத்தோடு புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தொடர்ந்து குழம்பு கொதிக்க தொடங் கி எண்ணெய் பிரிந்து வந் த பிறகு இறக்கி பரிமாறலாம்