டெல்லியில் 2020-ம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், 30 மொழிகளில் இருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டன.
அதன்படி, அறிவிக்கப்பட்ட தேசிய விருதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சூர்யாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அப்படத்துக்கு இசையமைத்ததால் ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேசிய விருது வென்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு நடிகர் மம்முட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேசிய விருது, அழகான பிறந்தநாள் பரிசு. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள சூர்யா” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, விருது பெற்றவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதன் பின்னர் விருது பெற்றவர்களுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதில், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் எனது நண்பர் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமாவுக்கு மிகவும் சிறந்த நாள். மிக்க பெருமை என கூறியுள்ளார்.