போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தை விட்டு வெளியேற விரும்புவதை பகிரங்கமாக வெளிப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி அதற்கு அவகாசம் அளிக்காமல், நடத்திய தாக்குதல்கள் கொடூரமானது.
இவ்வாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோட்ட கோ கம போராட்ட தளத்தில் நேற்று(22) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பை கேட்கவேண்டும்.
பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான ‘தாக்குதல்’ குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நிலையம் கோரியுள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும். அத்துடன் அவசரகால பிரகடனத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.