தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மருந்துகளை கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் ஜீவமணிதர்மராஜ் சிறப்பு உதவியாளர் மாரி ஆகியோர் திரேஸ்புரம் பகுதிக்கு சென்றுஆய்வு செய்த போது தமிழ்நாடு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பதிவு எண் இல்லாமல் இருந்த வள்ளத்தை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்த இருந்த 443 அட்டைகளில் 4 ஆயிரத்து 430 வலி நிவாரண மருந்து பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி வள்ளத்தில் உள்ளவர்கள் தப்பிசென்றதால் வள்ளத்தை கைப்பற்றியதோடு மருந்து பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஓப்படைத்தனர். கஞ்சா, பீடி இலை, மஞ்சள், ஏலக்காய் களைக்கொல்லி மருந்து என பல பொருட்கள் கடத்தி வந்த நிலையில் தற்பொழுது மருந்து பொருட்களையும் கடத்துகின்றனர்.