ரஷ்யப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் உள்ள சோவியத் கால நிலக்கரி எரியும் Vuhlehirsk மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய படையினர் ஒரு சிறிய தந்திரோபாய நன்மையை அடைந்துள்ளனர், அவர்கள் வுஹ்லெஹிர்ஸ்கைக் கைப்பற்றினர்” என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் கூறியுள்ளார்.
இதனிடையே, மூன்று தெற்கு பிராந்தியங்களிலும் ரஷ்யா பாரிய அளவில் துருப்புக்களை நிலைநிறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து முறையான கோரிக்கை எதுவும் பெறவில்லை
இதேவேளை, ரஷ்யாவின் படையெடுப்பை ஒரு தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புப் போர் என்று வர்ணிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், புதனன்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசி உரையாடலைத் திட்டமிட்டதாகக் கூறினார்.
இந்த அழைப்பு உக்ரேனைப் பற்றிய பேச்சுவார்த்தையாக இருக்காது, என்று பிளிங்கன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிய எந்தப் பேச்சும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், பிளிங்கன் மற்றும் லாவ்ரோவ் இடையேயான தொலைபேசி அழைப்பு குறித்து அமெரிக்காவிடம் இருந்து ரஷ்யா முறையான கோரிக்கை எதுவும் பெறவில்லை என்று TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களைப் பற்றி கலந்துரையாடுவதை தவிர, ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட தானிய ஏற்றுமதி குறித்த தற்காலிக ஒப்பந்தத்தை லாவ்ரோவுடன் பேசவுள்ளதாக பிளிங்கன் கூறினார்.