அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது தலைவர் தாம் என்றும், கட்சியை உருவாக்கும் வரையிலான அனைத்து கலந்துரையாடல்களிலும் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
அவசரகால சட்டம்
இந்நிலையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்பதை நாம் நன்கு அறிவோம்.
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது தொடர்பான போதிய ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற வழி வகுக்கும். எனவே தான் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக வாக்களித்ததாக”கூறியுள்ளார்.