எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு மூன்று போனஸ்
எண்ணெய் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் வருடத்துக்கு மூன்று போனஸ் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டடார்.
எரிபொருள், எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாக அவர் கூறினார்