தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஆறு அமைப்புகளின் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
6 இஸ்லாமிய அமைப்புகளின் தடைகளை நீக்குமாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ், அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அமைய ஜனாதிபதி ஊழியர்கள் குழுவின் பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது தடைகளை நீக்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.