முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் வெளிநாடு சென்று வர உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பசில் ராஜபக்ச மற்றும் 05 பேருக்கு ஜூலை மாதம் பயணத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.