வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் கூட்டணியான இவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை அரம்பத்தில் இருந்ததே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
அதன்படி இப்படம் இன்று வெளியானது முதல் அனைவரும் சிறந்த விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் கலெக்ஷன் சிம்புவின் திரைப்பயணத்தில் சாதனையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
நாயகன் கமல்
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் யாரும் எதிர்பார்க்காத காட்சி ஒன்று வருகிறது. ஆம், படத்தின் கிளைமாக்ஸில் கமலின் நாயகன் பட வேலு நாயக்கர் புகைப்படத்தை வைத்திருப்பார்கள்.
அதுமட்டுமின்றி நாயகன் படத்தில் ஐயர் கதாபாத்திரத்தில் வரும் டெல்லி கணேஷ் இப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் வருகிறார். அந்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.