காலை உணவுடன் முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நிறைய பேர் முட்டையை அப்படியே உடைத்து குடிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது. அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.
முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் இதயம், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும். பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி 7, வைட்டமின் எச் என்றும் அழைக்கப்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது.
இதன் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கவேண்டும். அதை விடுத்து முட்டையை அப்படியே குடித்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரும்.