மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளகஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது கடற்படையினரால் நேற்று (22.11.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்
மன்னார்-யாழ்.பிரதான வீதி வெள்ளங்குளம் வீதித்தடுப்பில் லொறியொன்றை மறித்து சோதனையிட்டபோது லொறியில் இருந்து சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் லொறியுடன் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.