ஜேர்மன் கைல்புறோன் நகரில் எழுந்தருளி இருக்கும் கந்தசாமி ஆலயத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக நேர்த்தியான நிர்வாக கட்டமைப்பைக் கொண்ட இவ்வாலயமானது மாலைநேர வகுப்பை நடத்தி வருகின்றது.
வாழ்வாதார உதவி
இந்த ஆலயமானது பல வாழ்வாதார உதவிகளையும் செய்துவரும் ஆலயமாக திகழ்கின்றது.
இந்நிலையில் குறித்த ஆலயத்தில் தமிழ் மொழியில் பூசை வழிபாடுகள் செய்ய ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சிலர் இந்த ஆலய பூஜை வழிபாடுகள் தொடர்பில் குழப்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனால் நாகரீமற்றமுறையில் ஆலய ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தாயகப் பகுதியில் பௌத்தமயமாக்கல் காரணமாக தமிழரின் தொன்மைகளை அழித்துவருவதோடு, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் பண்பாடு புதைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.