தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக நேற்றுமதியம்(03) உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 உட்பட சில படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார்.
ஆனால், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட மனோபாலா நேற்றைய தினம் காலமானார். இந்நிலையில் அவரது உடலுக்கு திரையுலகத்தினர், பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்போது மனோபாலாவின் நீண்ட நாள் ஆசை தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மனோபாலா பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க ஆசைபட்டாராம்.
பொன்னியின் செல்வன் கதையின் மீது மனோபாலா அதீத காதல் கொண்டிருக்க அதனை எப்படியாவது படமாக எடுக்கவேண்டுமென பலமுறை முயற்சி செய்துள்ளார். அதுதான் அவரது வாழ்நாள் ஆசையாகவும் இருந்துள்ளதாம்.
அத்தோடு அவரால் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்கமுடியாமல் போனது. இந்நிலையில் தற்போது மணிரத்தினம் பொன்னியின் செல்வன் கதையை படமாக இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டு வெற்றிகண்டுள்ளார்.
இதையடுத்து இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் மனோபாலா நடித்தாவது இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.