வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா நகர் நோக்கி பயணிப்பதற்காக கண்ணாட்டி பகுதியை சேர்ந்த தாயும் மகளும் பாடசாலைக்கு செல்வதற்கு பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் தாய் மற்றும் மகள் மீது டிப்பர் வாகனமொன்று மோதியுள்ளது.
இந்நிலையில் 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 6 வயதுடைய மகள் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதன்போது ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்திருந்ததுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.