கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர பிரதேசத்திலுள்ள மூன்று மாடி வீடொன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி, வீட்டின் உரிமையாளரை கொலை செய்துள்ளார்.
நேற்றைய தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரை படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் குறித்த நபர் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வீடு நிர்மாணம்
குறித்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதனால் வீட்டை பார்வையிடுவதற்கு குறித்த நபர் அடிக்கடி அங்கு வருவதாகவும் அந்த வீட்டின் பாதுகாப்பிற்காக காவலாளியாக சந்தேக நபர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதத்துடன் ஆற்றில் குதிக்க முற்பட்டுள்ளார். இதன் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பொலிஸார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.