இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ஹமாசிற்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு ஹமாஸ் தாக்குதல் இடைநிறுத்தம் தொடர்பான உடன்பாட்டினை மீறியது என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. காசாவில் ஹமாசின் இலக்குகளை தனது விமானங்கள் தாக்குகின்றன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் தாக்குதலில் காசாவின் பல பகுதிகள் தாக்கப்படுகின்றன என தகவல்கள் வெளியாகின்றன.
கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான ஹமாஸ் – இஸ்ரேலில் போரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.