நாட்டில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
காணாமல்போனவர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பொரலஸ்கமுவ – வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனும், கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனும், ஹற்றன் – பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், யடியன தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவரும் என 4 பேர் காணாமல் போன சிறுவர்களில் உள்ளடங்குகின்றனர்.
அதேவேளை இவ்வாறு காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், எடரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குகின்றனர்.
மேலும் , நோர்வூட்டைச் சேர்ந்த 82 வயதான பெண்ணும், மொறட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணும், பள்ளம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் ஒருவரும் காணாமல் போனவர்களில் அடங்குவதாவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.