ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கமானது இன்று (12.12.2023) காலை 7.35 மணியளவில் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4,000இக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21ஆம் தேதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (10) 4.8 ரிக்டர் அளவிலும், நேற்று (11) 4.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து இன்றும் (12) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.