கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று (12-02-2024) மீட்கப்பட்ட இந்த சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயதான கதிரவேல் பத்மராஜ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.