உறவினர்களுக்கு தத்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாளிகாவத்தை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்த மொஹமட் ரிப்கான் ஹாயிசா என்ற சிறுமியாவார்.
அதிவீவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழந்த சிறுமியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனையவர்கள் சிறுமியைத் தத்தெடுத்ததாகக் கூறப்படும் 45 வயது பெண்ணும் 19 வயது யுவதியும் 15 வயது சிறுவனுமாவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.