நல்லத்தண்ணி – வாழமலை பகுதியில் ஆலயத்தில் உண்ட உணவு ஒவ்வாமை காரணமாக 60 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஆலயமொன்றில் நேற்று மாலை பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டமையினாலேயே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன .
அத்துடன், பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் ,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.