கார்த்தி
வித்தியாசமான கதை அம்சத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் கார்த்தி.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜப்பான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
வா வாத்தியாரே!!
தற்போது கார்த்தி, இயக்குனர் நலன்குமாரசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு வா வாத்தியாரே என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாம், இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஹீரோயினாக 20 வயதான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் கார்த்தியை விட 26 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.