விஜய் யேசுதாஸ்
இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகர் தான் யேசுதாஸ். இவருடைய மகன் விஜய் யேசுதாஸ் பிரபல பாடகராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.
இவர் கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டு, தனியாக வாழ்ந்து வருவதாகவும் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சொல்லப்பட்டது.
விவாகரத்து!!
இது தொடர்பாக பேசிய விஜய் யேசுதாஸ், எங்களுடைய பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய குழந்தைகளுக்கு எப்போதும் சந்தோசம் கொடுக்கும் விதமாக என்னை அமைத்து கொண்டேன்.
இப்போது குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய அம்மாவுடன் இருக்கிறார்களா என்பதை நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கு சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள்.
விவாகரத்தால் நான் சோகத்தில் இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை என்று விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.




















