ஸ்டார்
கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஸ்டார். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் ரசிகர்களிடையே நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.
முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் வசூல் வேட்டையாடி வரும் ஸ்டார் திரைப்படம் கடந்த சில நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் குறைவான வசூலை ஈட்டிவருகிறது. இந்த நிலையில், 7 நாட்களில் ஸ்டார் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 18.80 கோடி வரை வசூல் செய்துள்ளது என்கின்றனர். முதல் 5 நாட்கள் வசூலில் பட்டையை கிளப்பி ஸ்டார், கடந்த இரண்டு நாட்களாக மட்டுமே தொய்வை சந்தித்துள்ளது.
ஆனால், வரும் வார இறுதியில் கண்டிப்பாக ஸ்டார் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாக்ஸ் ஆபிஸில் இந்த வார இறுதியில் ஸ்டார் படம் என்ன செய்ய போகிறது என்று