இசை பெரிதா இல்லை வரிகள் பெரிதா என இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை சமீப காலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பல்வேறு பிரபலங்களும் இதுபற்றி கருத்து தெரிவித்த நிலையில் தற்போது இளையராஜாவே சர்ச்சை பற்றி மறைமுகமாக பேசி இருக்கிறார்.
எனக்கு கவலையில்லை..
“தினமும் கேள்விப்படுகிறேன். என்னை பற்றி எதோ ஒரு வகையில் வீடியோக்கள் நிறைய வருகின்றன என எனக்கு வேண்டியவர்கள் சொல்வார்கள். நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. என்னுடைய வேலையை கவனிப்பது தான் என்னுடைய வேலை.”
“நான் என்னுடைய வழியில் சரியாக சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை பற்றி பேசிக்கொண்டிருந்த ஒரு மாதத்தில் நான் ஒரு symphonyயை எழுதி முடித்துவிட்டேன்” என இளையராஜா கூறி இருக்கிறார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024