மட்டக்களப்பு (Batticaloa) – வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்து விபத்துச் சம்பவம் புனாணை பகுதியில் இன்று (27) காலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புக்கு (Colombo) சென்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணவன் மற்றும் மனைவி காயம்
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அல் ஹாஜ் ஹலால்தீன் என்பவரும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் காரில் பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
கார் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் காரில் பயணித்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
காரில் பயணித்து மூன்று பிள்ளைகளும் காயங்களின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.