கட்சித் தலைமையை விமர்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேக்காவுக்கு(Sarath Fonseka) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் செயற்குழு இந்த வாரத்தில் கூடி சரத் போன்சேக்காவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தலைமையை விமர்சிப்பது
கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவ்வாறு கட்சித் தலைமையை விமர்சிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சரத் பொன்சேகா ஜனாதிபதியுடன் இணைவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறு எனினும் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
ராஜித, ஜனாதிபதி ரணிலை புகழ்ந்தாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, சரத் பொன்சேகா போன்று விமர்சனம் செய்யவில்லை என ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த வார நாடாளுமன்றில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை(Sajith Premadasa) மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார்.