கோனபினுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுத்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
76 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் திருமணமாகாதவர் எனவும் அவர் பல வருடங்களாக தனது சகோதரனின் மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொசன் போயா தின நிகழ்விற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் கொலை
அதற்கமைய, கடந்த இரண்டு நாட்களுக்குள் கொலை இடம்பெற்றிருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடியால் தாக்கியே இக்கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மருமகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சடலம் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கோனபினுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.