இளைஞர் ஒருவர் கடந்த 40 நாளில் 07 முறை பாம்பு கடிக்கு உள்ளான சம்பவம் ஒன்று இந்தியாவில் (India) பதிவாகியுள்ளது.
இந்தியா – உத்தரப்பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 24 வயதுடைய விகாஷ் தூபே என்ற இளைஞர் கடந்த 40 நாட்களுக்குள் ஏழு முறை பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளார்.
முதல் தடவை
கடந்த ஜூன் 2 ஆம் திகதி தூபே வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.
இவ்வறாக ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தூபேவை பாம்புகள் கடித்துள்ளன. வீட்டில் இருந்தால் பாம்பு கடிக்கிறது என்று அவரை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர். ஆனால் உறவினர் வீட்டில் வைத்தும் அவரை 07 வது முறையாகவும் பாம்பு கடித்துள்ளது.
மேலும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரமே பாம்பு தன்னை கடிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.