காத்தான்குடி 6ம் குறிச்சி பிரதான வீதியில் இன்று (16) மதியம் இடம் பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு ஆறு சிறுவர்கள் முச்சக்கர வண்டியில் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதன் போது பிரதான வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இராசா ஆலிம் வீதி வழியாக வந்து பிரதான வீதிக்கு ஏறிய முச்சக்கர வண்டியில் மோதுண்டது.
முச்சக்கர வண்டியில் பயணத்த மூன்று சிறுவர்கள் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன.
முச்சக்கர வண்டியில் இருந்த ஏனைய சிறுவர்களை அவ் விடத்தில் கூடிய பொது மக்கள் முச்சக்கர வண்டியில் இருந்து மீட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கையை மேற் கொண்டனர்.
மேலும் விபத்து தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.