யாழ் . போதனா வைத்தியசாலையின் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியை சேர்ந்த19 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்த குறித்த பெண் கடந்த 31ஆம் திகதி வைத்தியசாலை கட்டடம் ஒன்றின் நாலாம் மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண்ணுக்கு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து , சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
எனினும் , நேற்று முன்தினம் (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.