நீர்கொழும்பில் இருந்து காணாமல் போன ஒரு ஆண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போன தமது மகள் தொடர்பில் அவரின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முறைப்பாட்டின்படி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் திகதி முதல் குறித்த பெண்ணின் 41 வயது கணவரும் 02 வயது மகளும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
இந்தநிலையில், காணாமல் போன தந்தை மற்றும் மகள் பற்றிய தகவல்களை அறிந்த பொதுமக்கள் 0718591630 மற்றும் 031-2222222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.