அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுக்க பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது பிரதமர் கலாநிதி ஹரிணி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,
“தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் அமைச்சரவைத் தீர்மானத்தைப் பார்க்கும் போது, திறைசேரியிடமோ அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளிடமோ அனுமதி பெறாமல் இந்த முடிவை எடுத்துள்ளார்.
முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் தீர்மானத்தை செயல்படுத்தும் பகுதியை செய்யாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் என்ன அர்த்தம்? தேர்தலின் போது மக்களை தவறாக வழிநடத்துவதற்காக அவர் வழங்கிய பொய்யான வாக்குறுதி இது எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.