கண்டி – பல்லேகல மற்றும் உடுதும்பர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ஜீப் மற்று, டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளே காட்டில் மீட்கபட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ உயன பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அசெம்பிள் செய்யப்பட்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகிக்கப்படும் டிபென்டர் உரிமையாளர் எனக் கூறப்படும் 49 வயதுடைய மின் பொறியியலாளர் ஒருவரே பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய ஜீப் உதானம்பர உயன்வல பகுதியில் உள்ள வீடொன்றின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது 6 மாதங்களுக்கு முன்னர் சம்பிரதாயம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த நபரே ஜீப்பை நிறுத்தியதாகத் தெரிவித்தார்.
குறித்த ஜீப் இலக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குருநாகல் ஆண்டகல பிரதேசத்தில் அதே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ஜீப் இருப்பது தெரியவந்துள்ளது.