இன்று (30) அதிகாலை குளியாப்பிட்டிய – தியகலமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் முதலை ஒன்று புகுந்ததால் வீட்டினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுமார் 5 அடி நீளமுள்ள முதலையே வீடொன்றினுள் புகுந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக முதலை மக்கள் குடியிருப்பு பகுதியினுள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துக் குறித்த முதலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.