இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி ஊழுந்து தேவைப்படும். இதை வைத்து தான் பாரம்பரியமாக மக்கள் தொண்டு தொட்ட காலம் இருந்து இட்லி செய்து வருகின்றனர்.
பொதுவாக இது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும்.
இதை பல வகையாகவும் செய்யலாம். ஆனால் எப்போதும் போல ஒரே இட்லியை சாப்பிட்டு சாப்பிடு இருந்தால் இட்லியே வெறுத்துப்போய் விடும். எனவே இந்த இட்லியை லெமன் இட்லியாக மாற்றி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
20 இட்லி
2 டீஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
கால் டீஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் சீரகம்
2வற மிளகாய்
அரை அங்குல துண்டு இஞ்சி
1 கொத்து கறிவேப்பிலை
2 பச்சை மிளகாய்
1 கப் வெங்காயம்
அரை டீஸ்பூன் உப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 சிட்டிகை பெருங்காயத் தூள்
2 கொத்து கொத்தமல்லி இலைகள்
1 டீஸ்பூன் நெய்
1/2 எலுமிச்சை பழத்தின் சாறு
செய்யும் முறை
முதலில் போல் இட்லி செய்வதற்கு இட்லி தட்டுகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, இட்லி மாவை அச்சுகளில் ஊற்ற வேண்டும். பின்னர் இட்லி நன்றாக வேகும் வரை 6 முதல் 7 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.
பின்னர் இந்த இட்லி தட்டுக்களை எடுத்து ஆற விட்டு தனியாக எடுக்க வேண்டும். பின்னர் இப்போது சூடான இட்லியை ஒரு ஹாட் பேக்கில் வைத்து விட வேண்டும்.
பின்னர் நாம் எடுத்து வைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வற சிவப்பு மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
கடுகு விதைகளை வெடிக்க ஆரம்பித்ததும், பின்னர் சில நொடிகள் வறுக்க வேண்டும். இறுதியாக நாம் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை கண்ணாடி பதம் வரும் வரை சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின்னர் இதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்கயாத் தூளை சேர்க்க வேண்டும். இறுதியாக இட்லி மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, மசாலாப் பொருட்களுடன் இட்லியை நன்கு கலக்கும் வரை கிளற வேண்டும்.
இறுதியாக சிறிது நெய்யை ஊற்றி கலவையின் மீது எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விட வேண்டும். அடுப்பைை அணைத்து விட்டு இதனை மொத்தமாக நன்றாக கலக்கி விடவும்.
பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை விட்டு உடனே இறக்கி வைக்க வேண்டும். இப்படி செய்தால் சுவையான கமகம மணமான லெமன் இட்லி தயார்.