இலங்கையில் அண்மைக் காலமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 49,877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
மேலும், 24 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.