இலங்கையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கடத்திச் செல்லப்பட்ட அரியவகை வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோதே இந்த உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 52 ஆமைகள், 4 பல்லிகள், 8 குட்டி பாம்புகள் என மொத்தம் 64 வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட உயிரினங்களை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.