Bizarre Marriage Tradition: திருமணம் என்றால் அது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அதாவது, நீண்ட காலம் நீடிக்கக் கூடிய உறவுக்கான தொடக்க கட்டம் திருமண வைபவம் ஆகும். ஒவ்வொரு வீட்டிலும் மங்களகரமான நிகழ்வாக திருமண நிகழ்ச்சிகளை கொண்டாடி தீர்ப்பார்கள். இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற பெரும்பாலான மதங்களில் திருமணத்துடன் சடங்குகள், சம்பிரதாயங்கள் பிண்ணிப் பிணைந்திருக்கின்றன எனலாம்.
Bizarre Marriage Tradition: திருமணங்களும் சடங்குகளும்
அதேபோல், தொல்குடியினர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களிலும் திருமணத்தில் சடங்குகள் பின்பற்றப்படும். அந்தளவிற்கு திருமணம் ஒவ்வொரு வாழ்விலும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், திருமணம் மூலம் ஆண் – பெண் மட்டுமின்றி இருவேறு குடும்பங்களும் ஒன்றிணைகின்றன. மேலும், தலைமுறை செழிக்க ஒருவரின் திருமண வாழ்வும் முக்கியமாகும். எனவே, அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமின்றி திருமணம் என்பது ஒரு குடும்பத்திற்கே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஒரு குழுவுக்குள் அல்லது சமூகத்திற்குள் நடக்கும் திருமணங்கள் அகமண திருமணங்கள் என்றழைக்கப்படுகின்றன. அதேநேரத்தில், ஒரே குழுவுக்குள் அல்லது சமூகத்திற்கு இல்லாமல் வேறு குழு/சமூகத்தினர் இடையே நடைபெறும் திருமணம் புறமண திருமணங்கள் என்றழைக்கப்படுகின்றன. இருப்பினும், திருமணம் என்ற அமைப்பு தற்போது பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றன எனலாம்.
Bizarre Marriage Tradition: தனித்துவமான திருமண சடங்குகள்
தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணங்களை இதற்கு உதராணமாக கூறலாம். அதாவது, சாதி மறுப்பு மற்றும் மத மறுப்பு திருமணங்களே சுயமரியாதை திருமணங்களாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு சட்ட பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் வேறுபடும் எனலாம். இதில் மதம் மற்றும் சமூகங்கள், பொருளாதாரத்தின் தாக்கமும் இருக்கிறது.
Bizarre Marriage Tradition: வினோத சடங்குகள்
அதே வேளையில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் திருமண நிகழ்வின்போது காணப்படும் சம்பிரதாயங்கள் பொது நீரோட்டத்தில் இருப்பவர்களுக்கு வினோதமாக இருக்கும் எனலாம். அந்த வகையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், திருமணத்தின்போது பின்பற்றப்படும் சடங்கு ஒன்று பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது எனலாம். அதாவது, அந்த கிராமத்தில் திருமணத்திற்கு பின் சில நாள்களுக்கு மணப்பெண் உடைகள் ஏதும் அணியாமல் இருப்பது சடங்காக இருக்கிறதாம்.
Bizarre Marriage Tradition: மணப்பெண் உடைகள் அணியக்கூடாதாம்
ஹிமாச்சல் பிரதேசம் மணிகரன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பினி என்னும் கிராமத்திலேயே இந்த தனித்துவமான சடங்கு பின்பற்றப்படுகிறது. மேலும், மணப்பெண் உடையின்றி இருக்கும் இந்த காலகட்டத்தில், மணமகன் – மணப்பெண் இடையே எவ்வித பேச்சோ, தொடர்போ இருக்காதாம். இதே கிராமத்தில், அவர்களின் சாவான் மாதத்தில் கூட திருமணத்திற்குப் பிறகு ஆடைகளை அணியக்கூடாது என்ற தனித்துவமான பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. இந்த நேரத்தில் மணப்பெண் கம்பளி துணியை மட்டும் அணிந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்.
Bizarre Marriage Tradition: மணமகனுக்கும்…
மணப்பெண்ணுக்கு மட்டுமின்றி மணமகனுக்கும் சில சடங்குகள் இருக்கிறதாம். திருமணத்திற்கு பிறகு, மணமகன் ஒரு வார காலத்திற்கு மதுவை தொடவே கூடாதாம். இந்த சடங்குகளை மணப்பெண் – மணமகன் இருவரும் பின்பற்றினால், இருவருக்கும் நல்ல எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.