கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ் செம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
குறித்த போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் கார்லஸ் அல்காரஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம், 22 வயதான அல்காரஸ் தனது ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















