மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முதல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டிலிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,419 ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 167,160 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




















