மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் ஆலய உண்டியல் ஒன்றினை உடைத்து கொள்ளையிட முற்பட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் செங்கலடி பகுதியை சேர்ந்த 16 வயதுடையவரென தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றின் உண்டியலை உடைத்துக்கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர் அந்த பகுதி மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.